நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக அமைச்சு தெரிவிப்பு

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், நீர்மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை அதிகரிகரிக்கக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்