நாமல் குமார குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒப்படைப்பு

வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று (14ஆம் திகதி) கைது செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார, விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மஹசொஹொன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க மற்றும் புதிய சிங்கள தேசிய அமைப்பின் பணிப்பாளர் சுரேஷ் பிரியசாத் எனப்படும் டேன் பிரியசாத் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அமைதியை சீர்குலைக்கும் வகையிலான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தின் விசேட பொலிஸ் பிரிவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்