ஹபரண வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இருவர் காயம்

ஹபரண – ஹொரிவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹபரண – ஹொரிவில பாலத்திற்கு அருகிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றிற்கு இடம்வழங்குவதற்காக, எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் தரித்து நின்றுள்ளது.

இதன்போது, டிப்பர் வண்டிக்கு பின்னால் வந்த லொறி, வேகக் கட்டுப்பாட்டை இழந்தநிலையில் குறித்த டிப்பருடன் மோதியதுடன் டிப்பரானது முன்னாள் வந்த பஸ்ஸூடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பின்னால் வந்த லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அதே லொறியில் வந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் ஹபரண பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வாகன விபத்தில் அனுராதபுரம் மத்திய கலாசார நிலையத்தில் பணியாற்றும் 57 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்