நேர்கொண்ட பார்வை படத்துக்கு போடப்பட்ட செம மாஸ் பிளான்- தல மாஸ் இனி வேறலெவல்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

படத்தில் முக்கிய காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற சில காட்சிகள் எல்லாம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம்.

பாடல்களின் வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகிறது, அதை யுவன் ஷங்கர் ராஜா ஒரு வீடியோவில் கூறியிருந்தார். படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் வேக வேகமாக பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சீனாவில் ரிலீஸ் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இனி தல வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்