குழந்தை பிறந்துள்ள நிலையில் வருத்தத்தில் சீரியல் நடிகர் அமித் பார்கவ்

நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் கடைசியாக நடித்திருந்தார் நடிகர் அமித் பார்கவ். அதன்பிறகு சீரியலில் நடிக்க இருக்கிறாரா அல்லது வெப் சீரியஸ் போன்று முயற்சி செய்கிறாரா என்பது தெரியவில்லை.

சமீபத்தில் தனக்கும், மனைவிக்கும் பெண் குழந்தை பிறந்ததாக அதுவும் அக்ஷய திருதியை அன்று பிறந்ததாக சந்தோஷமாக செய்தி வெளியிட்டார். இப்போது அவர் ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார், அது கமல்ஹாசன் அவர்கள் பற்றி தான்.

ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தீவிரவாதத்திற்கு இவர்கள் தான் காரணம் என்று கமல்ஹாசன் ஒருவரை குறிப்பிட்டார், அதற்கு பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அமித் பார்கவும் தனது டுவிட்டர் பக்கத்தில், உங்களது மேல் எனக்கு பெரிய மரியாதை உள்ளது, ஆனால் நீங்கள் இப்படி ஒரு விமர்சனம் செய்தது கஷ்டமாக இருக்கிறது.

மக்களை பிரிக்காதீர்கள் மதச்சார்பற்றவராக உங்களை பார்க்கிறோம், அதனால் தான் உங்களை விரும்புகிறோம் என பதிவு செய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்