ஊவா,சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி.கித்சிறி அறிவித்துள்ளர்.

இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி விடுதிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஊவா வெலிசறை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம் பிக்கப்படவுள்ளதாக பவேந்நர் பேராசிரியர் ஜெயந்த ரட்னசேகர இன்றையதினம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்