வவுனியாவில் சிறிரெலோவினால் அனுஷ்டிக்கப்பட்ட குகன் அவர்களின் நினைவேந்தல்!

வவுனியாவில் சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலோ) இளைஞரணியினரால் கிறிஸ்ரி குகராஜாவின் (குகன்) 20வது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

கடந்த 1999 ம் ஆண்டு துரோகத்தனமாக சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் இராணுவ தளபதியுமான கிறிஸ்ரி குகராஜா (குகன்) அவர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இன்று (15.05.2019) மாலை 5மணியளவில் குகன் அவர்களின் திருவுருவ படமிருக்கும் வவுனியா வைரவர்முளியங்குளத்தில் சிறிரெலோ இளைஞரணியின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகள் , சிரேஷ்ட உறுப்பினர்கள், சிறிரெலோ கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்,இளைஞரணியினர், பிரதேச சபை உறுப்பினர்கள், குகன் அவர்களின் உறவினர்கள், யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தை சேர்ந்தவர்களும் குகன் அவர்களின் நண்பர்களுமான ஜீவன் , பாபு , உட்பட குகன் அவர்களின் நண்பரும் தமிழ்விருட்சத்தின் தலைவருமான சந்திரகுமார் கண்ணன்,செயலாளர் ஜெகன், ஆகியோருடன் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவி , ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்