பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்!

உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

சேவையின் அவசியம் கருதி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் காணப்பட்ட நிலையில்,, பின்னர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அந்தப் பிரிவு அவரின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்