அமித் வீரசிங்கவுக்கு விளக்கமறியல்!

மாஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், விசாரணை செய்வதற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியொருவரின் மேற்பார்வையின் கீழான விசேட பொலிஸ் குழுவால் கண்டி- தெல்தெனியவில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்