நாமல் குமார சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு!

வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெட்டிபொல நகரில் நேற்றுமுன்தினம் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறையின்போது நாமல் குமார அங்கு நின்ற காட்சி ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் நேற்று வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்ய வருகை தந்தபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்