கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கூற்றுக்கு ஆழுநர் ஆப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளால் ஆசிரியர்களிடத்தே ஏற்பட்ட குழப்பநிலைபற்றி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் சென்றவாரம் பேசினோம்.

அதாவது தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் இஸ்லாமிய ஆசிரியர்களும், முஸ்லீம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களும் தமக்கு ஏதேனும் இடர்ப்பாடுகள் இருந்தால் தற்காலிக இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா? என.

அதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் “ஓரிருவருக்கு இடமாற்றம் வழங்கினால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும். ஆகையால் அவற்றைத் தவிர்ப்போம். எனக்கூறினார்.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் தற்காலிக இடமாற்றம் பதிலாசிரியர் இன்றி ஏராளமாக ஆளுநரால் வழங்கப்படுவதாக அறிகின்றோம்.

பாடசாலைகளை ஆரம்பித்து சுமூக நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முழு அளவிலான முயற்சி எடுக்கும் நிலையில், பாதிப்புக்கள் ஏற்படாத பிரதேசங்களில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் சிந்தனையையும் புறந்தள்ளி இடமாற்றங்களை ஆளுநர் வழங்குவது சுமூகமான இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவா என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளதோடு ஒரு சமூகம் சார்ந்தவர்களுக்கு மட்டும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கையும் வேதனையும் ஒரே பாடசாலையில் இருந்து பதினைந்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு வரவழைத்துவிட்டு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கினால் மாணவர்களுக்கு கல்விபுகட்டுவது யார்? என்ற கேள்வியையும் சங்கம் எழுப்பி.. வருகைதரும் பிள்ளைகளுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையெனில் பாடசாலைகளைப் பூட்டுவதே நல்லது என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்