யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிசாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (16ஆம் திகதி) விசாரணைக்கு எடுத்துக் கொளள்ளப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்கள அறிவுறுத்தலுக்கு அமைய இவர்களை சரீரப் பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு நீதவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் உணவக நடத்துநர் மீதான வழங்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விசேட ​சோதனை நடவடிக்கையின்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோர் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்