மதன மோதக போதை பொருளுடன் மூன்று பேர் மதுவரி; திணைக்கள அதிகாரிகளால் கைது.

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் மதன மேதகய எனும் போதை பொருள் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த மூவர் ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மது திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.பெரேரா தெரிவித்தார்.

மதுவரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகிசிய தகவலினை யடுத்து நேற்று (15) இரவு எட்டு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 150 கிராம் எடை கொண்ட மதன மோதகய எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதை பொருள் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக திணைகள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின்மூலம் தெரிய வந்துள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் இன்று (16) நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்