தங்கப்பதக்க சாதனையாளரான பாலகிருஸ்ணன் வீதி விபத்தில் உயிரிழப்பு

இந்தியாவின் முன்னாள் தேசிய சாதனையாளரும் நீச்சல் வீரருமான எம்.பி. பாலகிருஷ்ணன், சென்னையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முன்னால் சென்றுகொண்டிருந்த கொங்ரீட் கலவை செய்யும் ட்ரக் வண்டி ஒன்றை முந்திச் செல்வதற்கு முயன்றபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டார்சைக்கிள் குறித்த ட்ரக் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவ இடத்திலுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29 வயதான எம்.பி. பாலகிருஷ்ணன் ஆடவருக்கான 50 மீற்றர் பட்டர் ப்ளே நீச்சல் போட்டியில் இந்திய அளவில் தேசிய சாதனையாளராவார்.

அத்துடன், இவர் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 50 மீற்றர் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்