வட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு

வட கொரியா, வரலாற்றில் மிகக் கொடூரமான வறட்சி காலநிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

கடந்த 37 வருடங்களில் இந்த வருடத்திலேயே அதிக வறட்சி ஏற்பட்டுள்ளதாக, வட கொரியா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, வட கொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அவசர உணவுத்தேவையை எதிர்நோக்கியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

அத்தோடு, நாளாந்தம் ஒருவர் 300 கிராம் உணவை மாத்திரமே உட்கொண்டு உயிர்வாழ்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை வட கொரியாவில், 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பஞ்சத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வட கொரியா முழுவதும் கடந்த 5 மாத காலத்தில் 54.4 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் 1982 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய குறைந்தளவு மழைவீழ்ச்சி எனவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்