ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னரான பொருளாதார இழப்பு தொடர்பில் மத்திய வங்கி மதிப்பீடு

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார இழப்பு தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு, இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள குறுகியகால மற்றும் நீண்டகால இழப்புகள் தொடர்பில் அடையாளம் காணப்படவுள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல்களினால் சுற்றுலாத் துறையே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தை மீண்டும் சிறந்த நிலைக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் உள்ளிட்ட அறிக்கைகள் எதிர்காலத்தில் வௌியிடப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்