ஆரம்பத்திலேயே சொதப்பிய பொது எதிரணி! – ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினரால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தலைமையில் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் பிரேரணையின் ஆரம்பமே பிழையானதாக அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையின் திகதி 2018.05.09 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிஷாத்துக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தயாரிக்கப்பட்டிருந்த இந்தப் பிரேரணையில் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருந்தனர். ஆனால், இதில் உள்ள திகதிப் பிழையை எவரும் அவதானித்திருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்