மாளிகைக்காடு பிரதேசத்தில் பாழடைந்த நீர் தேக்கத்தில் போடப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பாழடைந்த நீர் தேக்கத்தில் போடப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இன்று(16) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள லெனின் வீதி மற்றும் சித்தானைக்குட்டி கோயில் அருகாமையில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் பின்பக்கமாக நீர் தேங்கி காணப்பட்ட குழி ஒன்றில் சொட்கன் துப்பாக்கி தோட்டாக்கள் -21, ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 6 ,பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு கடற்படை விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடிப்படையாக வைத்து அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் மேற்குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு சம்மாந்துறை பொலிஸாரும் பிரசன்னமாகி இருந்ததுடன் மீட்கப்பட்ட பொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை தொடரந்து சம்பவ இடத்தினை சுற்றிவளைத்து கடற்படையினரின் சிறிய அணி ஒன்று சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்