மரணித்தவர்களுக்கு அஞ்சலி செய்வது எமது கடமை அதை தடை செய்ய முடியாது – இளஞ்செழியன்

சிங்கள அரசு தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொண்ட இறுதி போர் இடம் பெற்ற நாட்களில் இறந்த எம் உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது எம் இனத்தின் கடமையாகும். மரணித்தவர்களை நினைவு கூருவதற்கு எந்த சட்டமும் தடைவிதிக்க முடியாது என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் இணைப்பொருளாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு எதிர்வரும் 2019 மே 18ம் நாள் பத்தாவது ஆண்டு நினைவாகும் கடந்த பத்து வருடங்களுக்கு முன் இதே நாளான 2009 மே 18ம் திகதிதான் ஆயுதவிடுதலைப்போராட்டம் மௌனித்த நாளாகும்.

கடந்த ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு மே,18ம் திகதியும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் ஏதோ ஒருவிதமாக பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டு வருகிறது கடந்த 2016,ம் ஆண்டு தொடக்கம் முள்ளிவாய்க்காலில் ஏற்பாட்டில் மக்கள் ஒன்று திரண்டு பெரும் எழுச்சியாக வணக்க நிகழ்வை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதை யாவரும் அறிந்த விடையமே

மே 12 தொடக்கம் மே 18 வரை இனப்படுகொலை வாரத்தை பொது அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளினாலும் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அனுசரித்து வர்கின்றார்கள்.

இன் நிலையில் ஏப்பிரல் 21 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை காரணம் காட்டி பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கு அரசாங்கம் தடைவிதித்தாலும், படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூருவதற்கு தடை விதிக்க முடியாது. இன,மதம்,கட்சி பேதம் இன்றி தமிழ் இன படுகொலை நாள் மே 18 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்