“18ஆம் திகதி நல்லூர் கோயிலைத் தாக்கவுள்ளனர்!” – அநாமதேய கடிதத்தால் யாழில் பரபரப்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலை தாக்கப் போவதாகக் கிடைக்கப்பெற்ற அநாமதேய கடிதம் ஒன்று குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கையால் எழுதப்பட்ட இந்தக் கடிதம் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு வந்தது எனவும், அதன் பின்னர் ஆளுநர் இது குறித்து உடனடியாக வடக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தார் எனவும் சொல்லப்படுகின்றது. அதனையடுத்து பிரதிப் பொலிஸ்மா அதிபர் இதுபற்றி உடனடியாக விசாரணைகளை செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரியைப் பணித்துள்ளார்.

அதேசமயம் நல்லூர் கோயில் வளவில் இராணுவத்தினர் கூடுதல் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

“எனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் கோயிலை எதிர்வரும் 18ஆம் திகதி தாக்கத் திட்டமிட்டுள்ளனர்” என்று பேனையால் எழுதப்பட்ட கடிதமே இப்படி வந்துள்ளது என யாழ். பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவித்தன.

இதையடுத்து நல்லூர் கோயில் பகுதியில் இன்று முதல் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்