13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தாமையே நாட்டின் இன மோதல்களுக்கு காரணம்: விக்ரமபாகு

13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாமையே நாட்டில் இன மோதல்கள் தோற்றம் பெறுவதற்கு காரணம் என இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”19ஆவது அரசியலமைப்பின் கீழ் பணியாற்ற முடியாவிடின் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் செயலிழந்ததாகவே பொருள்படுகிறது. அதுவே தற்போதைய நாட்டின் நிலைமை.

19ஆவது அரசியலமைப்பின் அதிகாரங்களை கொண்டு தலைமைத்துவத்தை பெற்று நாட்டை இனவாதத்திலிருந்து மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்.

இதேவேளை, 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படின் அனைவருக்கும் அதிகாரம் பகிரப்பட்டிருக்கும். அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்டிருந்தால், நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.  ஆனால், வடமேல் மாகாணத்தில் பிரச்சினை ஏற்படும்போது அங்கு ஆளுநர் ஒருவரும் இல்லை அதிகாரங்களும் இல்லை. 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாமையே இப்பிரச்சினை ஏற்பட காரணம்.

ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை சரியாக கையில் எடுத்து செயல்பட வேண்டியது அத்தியவசியமாகும். இன்றேல் நாடு ஒரு இருண்ட சகாப்தத்தை நோக்கி பின்னோக்கி தள்ளப்படும் நிலையே காணப்படுகிறது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு நாட்டின் ஆட்சியாளர் முறையாக செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்