சஹரானுடன் தொடர்புடைய இருவர் கைது!

தாக்குதல்களுடன் தொடர்புடைய இருவர் ஹொரவபத்தனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களின் பின்னர் நாடு முழுவதும் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்