கண்டியில் சஹ்ரான் அமைப்பின் பயிற்சி முகாம்! முற்றுகையிட்ட இராணுவம்!!

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் பயிற்சி நடவடிக்கைக்காக பயன்படுத்திய வீடொன்று கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மாடிகளைக்கொண்ட இந்த வீட்டை கண்டி மாவட்டம் அருப்பொலவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுடன் சம்மந்தப்பட்ட சந்தேகிகள் சிலர் கண்டியிலும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே இந்த வீடு முற்றுகையிடப்பட்டது.

குறித்த வீட்டை சல்லடையிட்ட இராணுவத்தினர் சில முக்கிய தகவல்களையும் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு முக்கிய நபர்கள் சிலரும் வந்துசென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது. எவ்வாறாயினும் இதுதொடர்பான இறுக்கமான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்