முள்ளிவாய்க்கால் பத்தாவது நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் அமைந்திருக்கும் வெலிக்கடை தியாகிகள் நினைவுத் திறந்தவெளியில் சுடர் ஏற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் பத்தாவது நினைவேந்தலை முன்னிட்டு வியாழக்கிழமை  (16) மாலையில் திருகோணமலை கடற்கரையில் அமைந்திருக்கும் வெலிக்கடை தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.
 இந்நினைவேந்தல் நிகழ்வு  எம். சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நினைவுச் சுடர் ஏந்தி மரணித்தவர்களுக்காக வண்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போதும் எம். சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்  கடந்த காலங்களில் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில்  பல விதங்களில் வட கிழக்கில் இடம்பெற்ற படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களை ஞாபகப்படுத்தும் வகையில் அந்தந்த இடங்களுக்கு சென்று ஞாபகத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தி வந்திருக்கின்றோம்.
இறுதியாக எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் போது வட கிழக்கைச் சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும்  என கோரிக்கை விடுப்பதாகவும் என் சிவாஜிலிங்கம் இதன்போது குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்