சம்மாந்துறையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

சம்மாந்துறையில் பாழடைந்த நீர் தேக்கத்திலிருந்து துப்பாக்கி தோட்டாக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு எல்லைப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாகவுள்ள நீர் தேக்கத்திலிருந்தே நேற்று (வியாழக்கிழமை) இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சொட்கன் துப்பாக்கி தோட்டாக்கள்-21, ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்-6 என்பன பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

காரைதீவு கடற்படை விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு சம்மாந்துறை பொலிஸாரும் பிரசன்னமாகி இருந்ததுடன் மீட்கப்பட்ட பொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்