பலத்த பாதுகாப்பில் நல்லூர்!

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , நல்லூர் ஆலய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இராணுவத்தினர் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

எனது கணவரும் , வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக வடமாகாண ஆளூநருக்கு அநாமதய கடிதம் ஒன்று அனுப்பட்டதை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்