தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பில் ஆரையம்பதியில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை ஆரையம்பதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மண்முனைப் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆரையம்பதி பிரதேசத்தில் இந்து, கிறிஸ்தவ முறையில் அஞ்சலி நிகழ்வுகள் இரு இடங்களில் மேற்கொள்ளத் தீர்மானிக்கபப்பட்டுள்ளது. 2019.05.18ம் திகதி காலை 08.30 மணிக்கு ஆரையம்பதி புனித திரேசம்மாள் தேவாலயத்தில் விசேட அஞ்சலித் திருப்பலியுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து ஆரையம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள், பூசைகள் இடம்பெற்று இறுதியில் அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நற்பிட்டிமுனை அம்பலத்தடி ஆலயத்தில் மாலை 06.00 மணிக்கு பூசை நிகழ்வுகளுடன் அஞ்சலிச் சுடரேற்றும் நிகழ்வும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்