அச்சுறுத்தல்களிலிருந்து மீண்டெழ இலங்கைக்கு முழு ஆதரவு வழங்க தயார்: இந்தியா உறுதி

பயங்கரவாத அச்சுறுத்தல்களினால் சீர்குலைந்துள்ள இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முழு ஆதரவு வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து இதனை தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கண்டிக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்ற  பின்னர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை போன்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்த அச்சுறுத்தல்களிலிருந்து இலங்கை மீண்டெழ வேண்டியது தற்போதைய கட்டாய மற்றும் முக்கிய தேவையாக உள்ளது எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்