வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்!

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஹான் பெர்னாண்டோ இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார்.

இதனிடையே, இவரின் பதவி வெற்றிடத்துக்கு கொழும்பில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரொஹான் பெர்னாண்டோ பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்