தாக்குதல் சம்பவம் – செப்புத் தொழிற்சாலையின் ஊழியருக்கு மீண்டும் விளக்கமறியல்!

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையின் ஊழியர் ராஜேந்திரன் அப்துல்லாவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று வெல்லம்பிட்டியில் அண்மையில் முற்றுகையிடப்பட்டது.

அத்தோடு குறித்த தொழிற்சாலையை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியபோது தொழிற்சாலையின் முகாமையாளர் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்