நாட்டின் அச்சநிலையை போக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஜேர்மன்

நாட்டில் நிலவும் அச்ச சூழலை போக்கி நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜேர்மன் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Joerm Rohde எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

விஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இது தொடர்பாக அரசாங்கத்துடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்