கலவர பூமியில் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள்!

கடந்த சில தினங்களாக கலவர பூமியாக காட்சியளித்த மினுவாங்கொடயில் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் இன நல்லிணக்கத்திற்கு சான்றாக காணப்படுகின்றது.

மினுவாங்கொட உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) தொழுகைக்காக முஸ்லீம்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதகுருமார்கள் அங்கு சமூகமளித்திருந்த ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிலர் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் வன்முறையினை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கலவர பூமியாக காட்சியளித்த மினுவாங்கொடயில் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் இனநல்லிணக்கத்திற்கு சான்றாக காணப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்