அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்

அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகிய ஆளுநர்கள் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எவராவது அடிப்பவடைவாத செயல்களுடன் ஈடுபட்டிருந்தால் அல்லது சம்பந்தப்பட்டிருந்தால், ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேகம் இருக்கின்றது என்பதற்காக அவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது. இவர்கள் அடிப்படைவாத செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்தினால், கட்டாயம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடிப்படைவாதத்தை எதிர்க்கின்றது. அடிப்படைவாதிகளை பாதுகாக்க தயாரில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்