திருக்கோவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி மினி சூறாவளி மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகள் சேதம்

(திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு)

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கி காஞ்சிரம்குடா ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளதுடன் மினிசூறாவளி காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து சுமார் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேசசபை உபதவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன.

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ந்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்பட்டன.

இந்நிலையில் காஞ்சிரம்குடா பலத்தடியில் மீன் விற்றுக் கொண்டு இருந்த ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயதுடைய ராஜா குமார் எனும் சிறுவன் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ் சிறுவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்