சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய இராணுவ தினத்தினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதப்பத்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த வெற்றியை பறைசாற்றும் முகமாக ஆண்டுதோரும் தேசிய இராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்