சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுங்கள் – சுவிஸ்

இலங்கையில் சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுமாறு சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிஸ் வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் சுவிஸிர் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான காரணங்களை இன்றும் இலங்கையின் அரசாங்கங்கள் நிவர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் இலங்கையின் சமாதானத்துக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்