ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு!

இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மதரசா மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று(வெள்ளிக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘மதரசா மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. முக்கிய தரப்புகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் உத்தேச சட்டவரையு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்’ என அவர் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்