நியூசிலாந்தில் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அறிவுபூர்வமானதாகவும் கருத்தூட்டல் நிறைந்த துக்கத்தின் கூடலாகவும் நினைவூட்டும் மக்கள் பேரணி ஒன்று பூமிப்பந்தில் முதல் நிகழ்வாக நிகழ்ந்துள்ளது.

நியூசீலாந்தின் ஓக்லாந்து நகரில் இன்று வைகாசி பதினெட்டாம் நாள் மதியம் இது இடம்பெற்றது.

தமிழ் இனத்திற்கு நடந்த அநீதிகளையும் , வலிகளையும் நியூசிலாந்தில் வாழும் பிற சமூக மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் ,சர்வதேசத்திற்கு 2009 ம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் 10 வது வலிசுமந்த ஆண்டை நினைவுபடுத்தியும் இடம்பெற்ற இதனை நியூசீலாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியமும் நியூசீலாந்து ஈழத்தமிழர் இல்லமும் இணைந்து நடத்தின. நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அரசு சார்பற்ற பொதுநல அமைப்பு பிரமுகர்களும் மனித உரிமமைக் செயற்பாட்டாளர்களும் இதில் கலந்து கொண்டனர் .

பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்கடசியின் இனக்குழுமங்கள் விவகாரம் தொடர்பான பேச்சாளரும் அமைச்சின் இரண்டாம் செயலாளருமான மைக்கல் வுட் ,பிரியங்கா ராதாகிருஷ்ணன், நியூசீலாந்து தேசியக் கடசியின் பா உ ப்ரேம்ஜித் பாமர் ,க்ரீன் (பச்சைக்) கடசியைச் சேர்ந்த ஜான் லோகி , கோலரிஸ் கிரஹமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உறுப்பினர் பொதுமக்கள் ஒன்றுகூடல் பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகி, 1.00 மணியளவில் கண்காட்சியும்,, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் , இடம்பெற்றன.

அமைப்பினரால் வழங்கப்பட்ட முறையீட்டிற்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நியூசிலாந்து நாட்டில் இதுவரை நடந்த தமிழ்ர்களின் நிகழ்வுகள் எதிலும். இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்