உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் நினைவுகூரல்

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு  மன்னாரில் இடம்பெற்றது.

மன்னாரில் உள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து மாலை அனுவித்து, மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை நவரத்தினம் அடிகளார், இந்துமத குரு தர்மகுமார குருக்கள், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், வட. மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்