உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் வவுனியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு வவுனியா ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.

சூசைப்பிள்ளையார் குளம், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினர்,  சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு  சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மா சாந்திப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதன்போது இறுதி யுத்தத்தில் கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளை இழந்த 10 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் வரலாற்றினை நினைவுபடுத்தும் முகமாக உப்பில்லாத கஞ்சியும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்