யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வடமாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபை முன்வந்துள்ளது.

இதன்படி யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் ரயில்வே கட்டணத்தில் சலுகை வழங்கவும், ஹோட்டல் கட்டணத்தில் சலுகை வழங்கவும் வடமாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபை முன்வந்துள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொண்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ரயில்வே பயணக் கட்டணத்தில் 50 வீதத்தை திருப்பிச் செலுத்த வடமாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மே 24 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும், யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் நான்கு அல்லது, அதற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இரண்டு அல்லது, அதற்கு மேற்பட்ட நாட்கள் அங்கு தங்கியிருந்து மீண்டும் திரும்பும் பட்சத்தில் அவர்களின் ரயில்வே கட்டணத்தில் 50 வீதம் திருப்பி செலுத்தப்படும் என, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள பல ஹோட்டல்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சுமார் 50 வீத சலுகை வழங்க முன்வந்துள்ளன. சுற்றுலா பயணிகளுக்கான இந்த சலுகை இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இதே காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல நிகழ்வுகளும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்