வயோதிப தம்பதியினரை கொலை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!

எட்மன்டனில் வயோதிப தம்பதியினரை கொலை செய்த ஒருவருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

31 வயதான எட்வர்ட் கைல் ரோபர்ட்ஸ் என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய எட்மன்டனில் உள்ள வீடொனறில் வைத்து, கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

40 ஆண்டுகளாக குழந்தைகள் இன்றி வாழ்ந்து வந்த 93 வயது ஜோவோ நஸ்கிமெண்டோ மற்றும் 81 வயது மரியா நஸ்கிமெண்டோ ஆகியோரை கொலை செய்ததாலேயே இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்