பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகளை விடுதலைசெய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிக்கட சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) விடுதலை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற்றது.

அதன்படி வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில் 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50 கைதிகள், பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என 762 சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களில் 726 ஆண்களும் 36 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறையே அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்