முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இராணுவத்தினரால் புதிதாக இரண்டு சோதனை சாவடிகள் அமைப்பு

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவு நாளில் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் எழுச்சியாக கொண்டாடப்பட இருக்கிறன.

அந்த வகையிலே நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நினைவேந்தல் குழு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் இராணுவத்தினரால் புதிதாக இரண்டு சோதனை சாவடிகள் அமைக்கப்பபட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வட்டுவாகல் பாலப்பகுதியில் ஒரு சோதனை சாவடியும் இரட்டைவாய்க்கால் பகுதியில் ஒரு சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் ஊடாக செல்லும் வாகனங்களும் சோதனையிடப்படுகிறன. இது மக்களை குழப்பவா அல்லது மக்களுக்கு பாதுகாப்பு அழிக்கவா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்