சர்வ கட்சிகள் கூட்டத்திற்கு ரணில் அழைப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வ கட்சிகள் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி மாலை 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைவரம், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, சபாநாயகர் கருஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்குட்படுத்தும் திகதி தொடர்பாக முடிவெடுக்கும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், 10 குற்றச்சாட்டுகளுடன் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய திகதியைதான் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. செவ்வாயன்று இது குறித்து விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்