குருதியில் நனைந்தது போதும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !

தாய் நாடு குருதியில் நனைந்தது போதும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஆராதனையில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உலகில் உண்மையில் கடவுள் இருந்தால், ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. ஏன் அதற்கு இடமளிக்கின்றார் என்று சிலர் நினைக்கலாம்.

மனிதனின் சுயநலம் காரணமாக இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. இவை கடவுள் திட்டமிட்டவை அல்ல.

கொலை செய்வதும் மற்றவரின் உயிரை பறிப்பது கடவுளின் சட்டத்தில் இல்லை. தமது உயிர்களை கூட கவனத்தில் கொள்ளாவது இந்த முட்டாள் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உண்மையில் நாம் கவலையடைகின்றோம்.

1971 ஆம் ஆண்டு முதல் நாம் மனிதர்களை கொலை செய்வதை நன்றாக செய்து வந்தோம்.

இலங்கை மண் தேவைக்கும் அதிகமாக குருதியில் நனைந்து விட்டது. மேலும் எமது மண்ணை குருதியில் நனைக்கக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்