வலிசுமந்த 10 ஆண்டுகள்!

அன்று…..
2009…….
தாய் மரணத்தை அடைந்த பின்னும்
தாய் மார்பைச் சுவைத்தபடி – சேய்
தூங்கிய காட்சியினாலே

சோகக் கண்ணீராலும்
செங்குருதியாலும் தோய்ந்த
முள்ளிவாய்க்கால் மண்ணில்
10 ஆண்டுகளின் பின்னர் – அன்று
தாய்மார்பை 8 மாத சிசுவாய்
சுவைத்த சேய் – இன்று
கண்ணீரோடு அதே முள்ளிவாய்க்காலில்

முதல்சுடரேற்றி அஞ்சலித்தது.

1 கருத்து

  1. வலிக்கின்றது உள்ளம்.

உங்கள் கருத்தை சொல்லுங்கள்