கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை)  மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் பொது சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சியை உணவாக உட்கொண்ட நினைவை மீட்டும் வகையிலேயே இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10ஆவது ஆண்டை நினைவுகூரும் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அத்தோடு வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்