தமிழர்களுக்கு நியாயமான தீர்வை எதிர்பார்த்து மக்கள் மயப்படுத்தப்பட்ட நினைவுகூரல் – ரவிகரன்

தமிழ் மக்களுக்குத் நியாயமான தீர்வு வேண்டும் என்ற நோக்கத்தோடு முள்ளிவாய்க்கால் மண்ணிலே மக்கள் மயகப்படுத்தப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் தற்போதைய பயந்த சூழலிலும் பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமது உறவுகளுக்காக மக்கள் ஒன்றுகூடியுள்ளனர் என்று அவர் 4றினார்.

முள்ளாவாய்க்காலில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இந்த இறுதி யுத்தத்தில், தமது பிள்ளைகளை இழந்ததும், கணவனை இழந்தும், அங்கவீனப்பட்டும் வாழ்வதோடு, காணாமல் ஆக்கப்பட்டும், சிறைகளில் அடைக்கப்பட்டும் உள்ள நிலையில், சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் அரசியல்வாதிகளின் தலைமையின்றி மக்களின் குரலான மக்கள் மயப்பட்டதாக தொடர்ந்தும் நடக்கும் என இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்