வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு

( பாறுக் ஷிஹான் )

புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்க ரத்ண தேரர் மகிழ்ச்சியுடன் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்.

அதாவது விசேடமாக தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக சேர்ந்து இப்பிரதேசத்தில் இந்நாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையாக கட்டப்படுவது வரலாற்றில் முதல்தடவையாகும்.மக்கள் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கு வாழ்கின்றார்கள்.புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்தும் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடந்த 21 ஆம் தினம் இடம்பெற்ற அசாதாரண நிலைமையை அடுத்து மிகவும் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது.இதற்கு எமது முப்படையினருக்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் எல்லோரும் சமாதானமாக வாழ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.

மேலும் முப்படையினரின் பாதுகாப்புடன் வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி மேற்படி அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்